மனித வேட்டை
அன்று
மிருகமாய் இருந்தான்
மனிதனாக்க மதங்கள் தோன்றின
அறங்கள் புகட்டின
இன்று
மதத்தின் பெயரால்
மனிதம் தொலைந்து மிருகமாகி
மனிதனை மனிதன்
கொன்று குவிக்கும்
மனித வேட்டைகள் ஆயிரம்
மறுபடி மனிதம் தோன்றுமா
இல்லை
மிருகமாகி மனிதம்
தொலையுமா???