எங்கள்

நித்தமும் கவியாம் எங்கள் வாழ்வு
நிமித்தம் பெறுவதே எங்கள் நோக்கு
சத்தியம் சொல்வது எங்கள் வாக்கு
சமத்துவம் காண்பதே எங்கள் உயர்வு

பரந்த மனப்பான்மை எங்கள் பக்குவம்
பரப்பு கொள்ளாது எங்கள் அனுபவம்
பற்றற்ற கருத்து எங்கள் உச்சவம்
பணிசெய்து கிடத்தல் எங்கள் முக்கியத்துவம்

தன்னை யறிவதே எங்கள் உண்மை
தனித்துவம் பெறுவது எங்கள் தன்மை
தரம் காண்பது எங்கள் மேன்மை
தரணியை வெல்வது எங்கள் பெருமை

கருத்துடன் செய்வது எங்கள் கடமை
உணர்வுகள் உறவாடும் எங்கள் உரிமை
கடலாழம் கொண்டது எங்கள் திறமை
வஜ்ஜிரம் போன்றது எங்கள் தின்மை

நொடிபொழுதில் மறையும் எங்கள் பொய்மை
வடிவம் கொண்டது எங்கள் வாய்மை
அன்பைக் காண்பது எங்கள் அருமை
மடிய வேண்டும் எங்கள் மடமை

அறிய நினைப்பது எங்கள் அறிவு
அறிந்தபின் ஆடாது எங்கள் தௌiவு
என்றும் மறையாது எங்கள் பணிவு
எள்ளவும் குறையாது எங்கள் பரிவு

அறிவை பெறுவது எங்கள் மந்திரம்
எங்கும் செல்லும் எங்கள் தந்திரம்
குறி தவறாது எங்கள் அஸ்திரம்
எப்போதும் ஆடாது எங்கள் அஸ்திவாரம்

பேதம் கொள்ளாது எங்கள் வேதம்
எங்கும் கேட்கும் எங்கள் நாதம்
விண்ணில் பதியும் எங்கள் பாதம்
அருள் பாலித்தது எங்கள் ஜீவிதம்

எழுதியவர் : செல்வா (24-Dec-15, 10:00 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : engal
பார்வை : 77

மேலே