நாட்கள்

எண்ணங்கள் அசை போட
அலை மோதிய நாட்கள்
கவிதை பாட நினைத்து
கற்பனையில் மிதந்த நாட்கள்
சின்ன ஆசைகளில் சிக்கி
சிந்தனையற்று திரிந்த நாட்கள்
தோல்விகள் ஏற்க முடியாமல்
நண்பர்களுடன் சண்டையிட்ட நாட்கள்
கல்லுரி வகுப்புகள் புறகணிக்க
திரைப்படத்திற்கு சென்ற நாட்கள்
பரிட்சைகள் பக்கம் வர
கண்விழித்து படித்த நாட்கள்
அறிவினை நன்கு அறிய
விவாதங்கள் செய்த நாட்கள்
தந்தையின் ஆசை நிறைவேற
பட்டங்கள் பெற்ற நாட்கள்
ஏற்றங்கள் வாழ்வில் கொள்ள
மாற்றங்கள் கொண்ட நாட்கள்
எத்தனை நாட்கள் என்னை
எடுத்து உரைத்த நாட்கள்
எத்தனை நாட்கள் என்னை
எழுந்து நிற்கவைத்த நாட்கள்
எத்தனை நாட்கள் என்னை
அனுபவப் படுத்திய நாட்கள்
அத்தனை நாட்களும் என்
நினைவில் நீங்கா நாட்கள்.

- செல்வா

எழுதியவர் : செல்வா (24-Dec-15, 10:07 pm)
சேர்த்தது : செல்வா
Tanglish : nadkal
பார்வை : 80

மேலே