சிசு பாலன்

மரியின் மைந்தன்
மனிதரில் புனிதன்
மண்ணில் ஜெனித்த
பொன்நாள் இன்றன்றோ..!

உலகம் முழுதும்
விழாக் கோலம் பூணும்
ஏசு பிரானின்
பிறந்த நாள் இன்றன்றோ..!

உயர் குடியில் பிறந்தும்
சிறு குடிசை விரும்பிய
தேவ மைந்தனின்
பேரின்ப பெருநாள் இன்றன்றோ..!

சிலுவை சுமந்து
சாட்டை தாங்கிய
தேவ தூதனின்
நல்திருநாள் இன்றன்றோ..!

காலத்தின் கட்டளையை
கருணையுடன் ஏற்ற
ஜீவிய கர்த்தர்
ஜெனித்த நாள் இன்றன்றோ..!

வருந்தி பாரம்
சுமந்த கோரம்
விரைந்து தீர்க்கும்
தீர்க்க தரிசி
உதித்த நாள் இன்றன்றோ..!

ஒரு கன்னம் வீங்கியும்
மறு கன்னம் காட்டிய
சிசு பாலன்
ஜீவித்த நாள் இன்றன்றோ..!

பாவத்தின் சம்பளம் - அகோர மரணம்
யூதர்களே அதற்கு முன் உதாரணம்..!
இயேசுவின் நாமம் சொன்னால் போதும்
எல்லோரின் பாவம் காணாமல் போகும்

உலக அமைதி விரும்பிய மகானின்
திருவடி பணிந்து தினமும் தொழுவோம்
கலகம் செய்து காரியம் முடிப்பதை
கர்த்தர் தினத்தில் காவு கொடுப்போம் !

( உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய சமர்ப்பணம்)

எழுதியவர் : இரா.மணிமாறன் (25-Dec-15, 6:16 am)
பார்வை : 105

மேலே