காதல்
பார்வை தின்று பசியாரும் இன்பம்
புன்னகை கண்டு பூரிக்கும் சுகம்
ஆவல் கொண்டு நீளும் ஏக்கம்
காத்திருப்பும் இங்கு ஒரு வரம்
வார்த்தைகள் கடந்த புதியதொரு மொழி
மதங்கள் தாண்டிய கண் அறியா புது கடவுள்
கனவுகள் சுமந்தே விழித்திருக்கும் இரவு
கற்பனைகளுடன் விடியும் அதிகாலை பொழுது
பகலில் கூட நிலவு தோன்றும் அதிசயம்
சாலைகள் எல்லாம் மேகமாய் மாறும் அபூர்வம்
கடந்து போகையில் உள்ளூர ஊறும் உற்சாகம்
ஒற்றை வார்த்தை மட்டும்
வேலை நிறுத்தம் செய்யும் வியப்பு
காதல்
ஒவ்வொரு மனிதனின் அடிப்படை
உரிமையும் தேவையும் !