புனித நாயகன் பிறந்த நாளிதில் இனிய வாழ்த்துக்கள்
மனித மனமெனும்
மயக்க நிலங்களில்
கருணைப் பூவனம்
குழுமிப் பூத்திட
புனித நாயகன்
பிறந்த நாளிதில்
இனிய வாழ்த்துக்கள்
இதய வாசலில்
அலைகள் தொடுத்திடும்
கடலின் ஞானமாய்
நுரைகள் பூத்திடும்
பாலின் வெண்மையாய்
இரவைத் தேற்றிடும்
நிலவின் இனிமையாய்
உறவும் உலகமும்
வாழ வாழ்த்துக்கள்