விவசாயி - எஆர்முருகதாஸ் அவர்களுக்கு

சோறு போட்ட பூமி
சோர்ந்து போய் கிடக்கிறது
வாழ்வை வளர்த்த பூமி
வனம் பார்த்து தவிக்கிறது
நாம் வளர்த்த விவசாயம்
நாதியில்லாமல் இருக்கிறது
உயிரை வளர்த்த விவசாயி
உயிரை கொடுக்கிறான்
உண்ண உணவில்லாமல்
உடுத்த உடையில்லாமல்
மண்ணுக்கு உரமிடுகிறான்
தன் உயிரை.
தெரியாமல் தன் இருந்தது
தெளிவாய் இப்போது புரிந்தது
உண்மையாய் உழைக்கும்
விவசாயிக்கு உதவி புரிந்திடவும்
அவர்களுக்கு துணையாய் இருக்கவும்
மனம் மனம் நினைத்து அழுதது,
கத்தி எனும்
கர்வமில்ல திரைபடத்தை
காண நேர்ந்து,
உண்மையை உலகிற்கு
உனர்த்திய எ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு
உள்ளம் கனிந்த பாராடுக்கள்.

எழுதியவர் : கவிப்ரவீன் (26-Dec-15, 6:48 am)
பார்வை : 74

மேலே