பிணம் தின்னும் பருந்துகள்

பிணம் தேடும் பருந்துகளாய்
பணம் தேடும் மனிதன்
உயிர்களின் வேதனையை
உணவாக்கிகொள்ளும் கொடுமை ............

சுயநலம் நிறைந்த
சூழ்ச்சிக்காரர்களின் கைகளில் சிக்கி
வலியால் வதைகின்றது
எத்தனையோ அப்பாவிகளின் வாழ்க்கை ...........

பொருள்வளம் இழந்தவர்கள்
போராடித்தான் வாழவேண்டிய
கலிகால நரகம் -
சொர்க்கம் மனிதநேய மில்லாதவர்கே ...........

சேருமிடத்தே சேரும்
சொல்வத்திர்க்கு கூட
பரிகாசமாகவே தெரிகிறது
பாட்டளிகளின் உழைப்பு ..........

அடுத்தவன் பசியினை அவமதிப்பு செய்துவிட்டு
தனது ருசியினை நாடும் சிற்றின்ப உலகத்தில்
பாடுபட்டு பாழாய் மடிகிறது
ஏழைகளின் விலைமதிப்பில்லாத உயிர் ...........

உயிர்கொல்லும் அம்புகளை
சுமந்து வரும் எத்தனையோ வார்த்தைகளில்
எளிதில் எமனுக்கு இரையாகிறார்கள்
நியாயத்தின் பிள்ளைகள் ..........

போராடி தோற்பதும்
வெற்றியே என்றாலும்
பொல்லாத உலகத்தில்
பழிசொர்க்களுக்கு மட்டும் பற்றாக்குறை இல்லை ...........

முகமதில் உமிழ்தலும்
அகமதில் அழுதாலும்
புறமதில் புறமே பேசும்
ஐயோ பொல்லாத உலகமே ..............

பிணம் தின்னும் கழுகுகளும்
பணம் பண்ணும் மனிதர்களுமே
நீ சுமக்கும் பாரத்தில்
பெரும்பாலனவர்கள் ..............

எழுதியவர் : வினாயகமுருகன் (26-Dec-15, 9:12 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 71

மேலே