தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற

தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெற...
-----------

ஒவ்வொருவரும் தனது வீட்டிலும், அலுவலகத்திலும் குப்பையைத் திரட்டி, சாலையில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடுவர். பிறகு, நகராட்சியால் குப்பை லாரியில் அவை எடுத்து செல்லப்படும். அந்தக் குப்பை எங்கு போகிறது, எப்படி சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்காமல் களையப்படுகின்றது என்பது பலருக்கும் தெரியாது.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்துள்ள "தூய்மை இந்தியா இயக்கம்' சந்திக்கும் தலையாயப் பிரச்னை, சேகரிக்கப்படும் குப் பையைக் கையாளுவதற்கானத் திட்டம் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்படவில்லை என்ற நிலைமையே ஆகும். தற்போது, பல நகரங்களிலும், கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட குப்பை, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் எரிக்கப்படுகின்றன. கொட்டப்பட்ட குப்பை

யிலிருந்து கொசுக்கள் பெரிதளவில் பெருகி, தொற்று நோய் பரவுவதற்கு வழி ஏற்படுகிறது. பெரிதும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரக் கேட்டிற்கு ஏதுவாகிறது. சென்னையில் பெரிதளவு குப்பை கொட்டப்படும் பெருங்குடி, கொடுங்கையூர் போன்ற இடங்களுக்குச் சென்று பார்த்தால் நன்கு புரியும்.

இந்தியா தூய்மை இயக்கத்தினை அறிவிப்பதற்கு முன், நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மாநகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளிடம் குப்பையை சுகாதார ரீதியில் கையாளுவதற்குத் திட்டங்கள் உள்ளனவா? அதற்குத் தேவையான முதலீடு திட்டத்தை நிறைவேற்றத் தேவையான கால அவகாசம் போன்ற விவரங்களை மத்திய அரசு கேட்டு தெரிந்து கொண்டதா என்று தெரியவில்லை. நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தியா தூய்மை இயக்கத்தை மோடி அரசால் நல்லமுறையில் நிறைவேற்ற முடியாது.

நாடெங்கும் உள்ள நகரங்களிலும், கிராமங்களிலும், குப்பையைக் கையாளும் பணியைத் தொடங்காவிட்டால் தூய்மை இயக்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாது என்பதே நிதர்சமான உண்மை. குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையை அடுத்துள்ள பெருங்குடியில், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பல ஆண்டு

களாக பேசப்பட்டு வருகின்றது. இது குறித்து அறிய, மாநகராட்சி அலுவலர்களும், மேயர் மற்றும் கவுன்சிலர்களும் பல முறை வெளிநாடு சென்று வந்துள்ளனர். ஆனால், நடைமுறையில் எந்தவித செயல்பாடும், முன்னேற்றமும் தெரியவில்லை.

குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயத்திற்கு உபயோகிக்கலாம். கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் குப்பையிலிருந்தும் கழிவு நீரிலிருந்தும் பல ரசாயன பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கழிவு நீரிலிருந்து (ள்ப்ன்க்ஞ்ங்) ஆண்டிற்கு 50.000 டன் உற்பத்தி செய்யும் மெத்தனால் (ஙங்ற்ட்ஹய்ர்ப்) தொழிற்சாலை கனடா நாட்டில் இயங்கி வருகின்றது. இந்தியாவில் தற்போது ஆண்டொன்றிற்கு சுமார் 10 லட்சம் டன் மெத்தனால் நமது தேவைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குப்பை மற்றும் கழிவு நீரிலிருந்து மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளை பெரிதளவில் ஏற்படுத்தினால் நாடு பெரிதளவில் பயன்பெறும்.

கழிவு நீரிலிருந்து, கடற்பாசி விவசாயம் செய்யலாம். கடற்பாசி விளைவதற்குச் சுத்தமில்லாத கழிவு நீர் போதுமானது. வெளிநாட்டில் தற்போது கடற்பாசியிலிருந்து எண்ணெய் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் எத்தனால் போன்ற ரசாயனப் பொருள்கள் தயாரிக்கவும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

குப்பையையும் கழிவு நீரையும் கொண்டு பலவிதமான தொழிற்சாலைகள் ஏற்படுத்த மேலும் சாத்தியக்கூறுகள் பலவும் உள்ளன. இத்தகைய குப்பைகளைக் கையாளுவதில் நல்ல அணுகு முறையை அரசு தீர்மானித்து, அமல்படுத்துவது மிகவும் அவசியம். குப்பையை சேகரிப்பதிலும், அவற்றை தரம் பிரிப்பதிலும், அவற்றை சுகாதாரமுள்ள நன்மை தரக்

கூடிய முறையில் உபயோகிக்கவும், நமது நாட்டின் நிலைமைக்கு எற்ப திட்டம் அமல் செய்வது உடனடியான தேவை.

இத்தகைய விரிவான திட்டமில்லாமல் இந்தியா தூய்மை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று மோடி தொடங்கியுள்ள "இந்தியா தூய்மை திட்டம்' வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டியது, நாட்டு மக்களின் தலையாய கடமை.

நன்றி ;என்.எஸ். வெங்கட்டராமன், சென்னை.

எழுதியவர் : என்.எஸ். வெங்கட்டராமன், (26-Dec-15, 8:58 am)
பார்வை : 8833

மேலே