நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி
நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி
-------------------------------
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, கிராம புறங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் 32 சதவீதம் அளவுக்கே கழிப்பறை வசதி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கழிவறைகள் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, 2019ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கழிப்பறை என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகளை கட்டவும், இத்திட்டத்தை கண்காணிக்க உயர்மட்ட குழுவும் அமைக்கப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழிப்பறைகள் கட்டும் திட்டத்துக்கான கண்காணிப்பு பணி இன்று முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில் காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதற்குள், ‘சுகாதாரமான இந்தியா’ என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் கழிப்பறை அமைக்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு வருகிறது.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் கழிவறை கட்டுவதற்கான நிதியுதவியை 10,000 ரூபாயில் இருந்து 12 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நன்றி ;தினகரன்