ஏக்கம்
பதியம் போட்டவனுக்கு
பவழம் முளைத்ததில்,
பாலைவன சூட்டிலும்
குளிரத்தான் செய்தது!
கற்பனை குதிரை
கடல் தாண்டும்போது,
கட்டில் அறையில்
கட்டியவளை தேடுகிறது!
கவலை மறந்த கண்கள்
கலண்டரை தேடுகையில்,
ஒன்பது மாதங்கள்
ஒன்றும் புரியவில்லை!
பத்தாம் மாதமே
பதிந்து போனது !