பூந்தமிழ்நாடு

ஆதியில் இருந்த அரும்பெரும் நாடு
ஆயினும் இன்றும் இருந்திடும் நாடு
ஏங்குவார் இல்லா எழில்பெரும் நாடு
ஓங்குபுகழ் மக்கள் கொண்டநல் நாடு
தேனிசை பாடி ஆறுகள் ஓட
மானசை போடும் காடுகள் சூழ
தென்றலின் இசையில் மூங்கில்கள் பாட
தெருவெலாம் தமிழின் தனியிசை வீழ
பஞ்சமென்று ஒன்றை பார்க்காத நாடு
தஞ்சமென்று வருவோரை தாங்குநல் நாடு
சான்றோர் கோடி கொண்டபெரு நாடு
ஆன்றோர் தேடி போற்றுமொரு நாடு
கவியினில் கம்பன் கபிலனைக் கொண்டு
குவியினில் குன்றா புகழ்பலக் குவித்து
செவியினில் அமுதாய் செந்தமிழ் வார்க்கும்
புவியினில் உயர்ந்த பூந்தமிழ் நாடே!

எழுதியவர் : சுரேஷ்குமார் (26-Dec-15, 6:46 pm)
பார்வை : 1037

மேலே