தலைகீழ் வாழ்க்கை 2

உள்ளங்கையில்
ஓவியம் வரைந்தபடி
விலகிப் பறந்த
பட்டாம் பூச்சிகளின் பார்வைகளும்
........
மூச்சிறைக்கும் சிறுவனுக்காய்
இரக்கப்பட்டே தரையிறங்கும்
நூலறுந்த பட்டமொன்றும்
......
ஒரு மாலை மழையில்
இலையில் தேக்கிய துளிகளை
திடீர் மழையாக்கி
சிறுமியிடம் தட்டாமாலை
விளையாடும் மரமும்
......
மொட்டை மாடியொன்றில்
தாயொருத்தியால்
சோறூட்டப்பட்ட நட்சத்திரத்தை
வாய்ப்பார்த்து நிற்கும் நிலவும்
....
மழலைப்பருவத்தில்
மகிழ்ச்சியுடன் பகிர்ந்தன
தலைகீழ் வாழ்க்கையொன்றை

எழுதியவர் : சிந்தா (26-Dec-15, 7:20 pm)
பார்வை : 68

மேலே