சுனாமி நினைவுகள் மறவாது
நெடு துஞ்சல் தான் விலக்கி
சோம்பல் முறிக்க கண் திறந்து
அடங்கா வீரனாய் கரை விரைந்து
துஞ்ச லுற்ற விழி, தூக்கம்
கலைக்கும் முன், துக்கம் நிறைத்து
பெரு மழை விழி பொழிய
விண் மிரளும் அழு குரல்
விடா தொலிக்க குடும்ப மாயிரம்
பிரித் தெடுத்து குழந்தைகள் பல
தனித் தெடுத்து கதற விட்டாய்
கருணை இன்றி கடலே நீ...
கண் நீர் தடை மறுத்து
தொடர விட்டாய் தொய் வில்லாமல்
மக்கள் எங்கே? மனைவி எங்கே?
தேட விட்டாய் கரை முழுக்க
அடையாளம் தெரியா அனா தையாய்
மண்ணில் மறைத்தார் குழு குழுவாய்
ஆண்டு பதி னொன்று ஆனாலும்
ஆழம் நிறைந்த மனக் கடலில்
நினைவு மிதக்கும் நீங்காது நிரந்தரமாய்.....