தமிழன் தோற்றான்

சங்கம் தொடங்கி எண்ணிலடங்கா ஏடு
ஆயிரம் அழிந்த தொழிந்தது ஆரவாரமிலா
தீட்டென திசைத் திருப்பி கல்வி
கொடுக்க கணம் மறுத்து ஒழித்து
வைத்த நூல்கள் பல அழித்து

விட்ட கரையான் உண்டு கழித்து.
கோவில் விட்ட சுவடி பல
கடவுள் காப்பார் என்று ரைத்து.
எடுத்து வைத்தார் ஆயிர மாயிரம்
எப் பயனும் எட்டவில்லை ஏனையோருக்கு.

அள்ளிக் கொடுத்த அரசனும் அடிமை
அவரிடம் ஆதி தொடங்கீண்டு வரை.
எம்மொழி தொன் மொழி இருக்க
ஈண்டு பேசா மொழி வழிபாடு
எப்படி ? எம் கடவுளுக்கு விளங்கும்?

மக்கள் நலம் மிகு மன்னன்
மறந்தான் தன் குடி முன்னிறுத்த
வின் தொட விமானம் அமைத்து
விற்று விட்டான் வந்த வர்க்கு
தொல்குடி தோற்றது தஞ்சக் குடியிடம்!

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (26-Dec-15, 4:52 pm)
பார்வை : 433

மேலே