இனியும் வேண்டாம் அந்நாள்

ஆழிப் பேரலை
பலரை அழவைத்துச் சென்றநாள்
அண்டம் அடங்க ஊரோடே
உயிர்களைப் பலி கொண்டு
செரித்த நாள்!!

மனிதம் உணர்ந்த மரணங்களும்
சடப் பொருள் இழந்த மனிதர்களும்
இறைவன் வலிமை புரிந்த நாள்
எளியவர் வலியவர் ஒரு கூட்டில்
பேதமின்றி உறங்கிய நாள்

பிரேதங்கள் பேதமின்றி ஒன்றாய்
ஓரிடத்தில் வரிசையாய் கிடக்க
கபன் பிரித்துப் பர்த்து
ஓலமிட்டு அழுத நாள்
ஓர் மடுவில் அடங்கிய நாள்!

ஆண்டுகள் பல சென்றாலும்
அரவணைத் திழந்த உறவுகளை
நினைந்தே உருகும் நாள்
இடம் பெயர்ந்தோர் தம் மிடம்
மீட்டிப் பார்க்கும் நாள்

அனாச்சாரங்களும் அவலங்களும்
இனி வேண்டாம் என்றே இறைவன்
உலகுக்கு முன்வைத்த நாள்
அந்நாள் இனியும் வேண்டாம் என்றே
இரைஞ்சும் நாள்!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (26-Dec-15, 8:31 pm)
பார்வை : 160

மேலே