தராசு

நீதி, தர்மம் என்ன ஆயிற்று ???
--------------------------------------------------
நீதி, தர்மம் என்ன இது ?
எங்கே சென்றாள் நீதி தேவதை?
குற்றம் புரிந்தவ னெல்லாம்
உலா வருகிறான் நாட்டிற்குள்
பரிதாபமாய் பல அப்பாவிகள்
தவிக்கின்றனர் சிறைச சாலையில்...
மனம் குமுறுகிறது !!
துடிக்கின்றது...
சட்டத்தின் ஓட்டைகள்
அடைக்கப்பட வேண்டாமோ?
பூனைக்கு யார் மணி கட்டுவது??
இதுதான் நம் நிலைமை!!!
கூக்குரல் இட்டால் தண்டனை
நியாயம் கேட்டால் தண்டனை
ஏன் , எதற்கு என்றால் தண்டனை
பெண் குரல் கொடுத்தால் தண்டனை
குற்றம் என சொன்னாலோ , எழுதினாலோ தண்டனை
லைக் போட்டால் தண்டனை
ஷேர் செய்தால் தண்டனை
ஆனால்....
குற்றம் புரிந்தால் விடுதலை???
என்ன இது நியாயம்??
நெஞ்சின் வேதனை கூற முடியவில்லை...
ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி