விதியென விளிப்பது காண்
அன்றொரு பொழுதில் அந்தி வேளையில்,
அன்புடை கள்வன் அருகிருந்தான் தோழி
இன்று இத்தினம் இங்குயில்லை நெஞ்சம்,
சென்று தூது சொல்லிவர யாருண்டு
செல்லிடை பொருள்க்கூட கூடாத காலமடி,
மெல்லிடை வல்லினமாய் மெலிவிழந்து காணுதடி,
மதிமயங்கும் பொழுதெல்லாம் மனம் வருந்துதடி,
விதியென விளிப்பது காண்....