உன் மகன் மகன் எங்கே

உன் மகன் மகன் எங்கே?

இதென்னடா தம்பி ஒரு மாதிரியா என்னவோ கேக்கற?

உன் மகன் மகன்-னைத்தான் எங்கேனனு கேக்கறென்.

இதென்னடா கரகாட்டக்காரன் வடிவேலு கவுண்டமணி வாழைப் பழ நகைச்சுவை மாதிரி கேக்கற?

அது தான் கேட்டேனே உன் மகன் மகன் எங்கே?

அதென்ன மகன்-ங்ற சொல்லை ரண்டு தடவ பயன்படுத்தற?

உம் பையன் பேரு என்ன அண்ணே?

ஏண்டா எம் பையம் பேரக்கூடத் தெரியாமலா நீ எஞ் சித்தப்பா பையனா இருக்கே?

அதனாலென்ன அவம் பேர ஒரு தடவ சொல்லுங்க.

சரி சொல்லறென். அவம் பேரு குமார்.

அதாவது உங்க மகன் பேரு மகன்.

இல்லையே அவம் குமார்-தாண்டா. என்னடா மறுபடியும் மகன் மகன் -ன்னு சொல்லற?

உண்மையைத்தாண்ணா சொல்லறென். குமார்-ங்கறது இந்திப் பேரு. இந்திலே குமார்-ன்னா மகன் -னும் ஒரு அர்த்தம் இருக்குது.

அட எழவே அர்த்தம் தெரியாமா சினிமா மோகத்திலே எம் மகனுக்கு மகன்-னே பேரு வச்சிட்டேனே.

-------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
-----------------------
कुमार = Prince,boy, son, chaste or unmarried

எழுதியவர் : மலர் (28-Dec-15, 12:49 am)
பார்வை : 227

மேலே