காதல் 8

குரங்காட்டியின்
கையில்
பிரம்பைப் போல்
உந்தன் விழிகள்

சுழலும்
உன் பார்வையில்
தாவுகிறேன்
குதிக்கிறேன்
கரணங்கள்
அடிக்கிறேன்

என்
நினைவின் கழுத்தில்
நீ போட்ட
காதலெனும்
கயிற்றின் நுனி
உந்தன் கையிலடீ ...

பார்வையாளராய்
எவருமே
இல்லையாயினும்
பரவாயில்லை

உந்தன்
பார்வையை மட்டும்
வேறெங்கும்
திருப்பிவிடாதே

என்
இதயத்தின்
ஜீவாதாரத்திற்கான
சில்லரைகளையும்
சிதறும் - உன்
பார்வையிலிருந்துதான்
பொருக்கிக்
கொள்கிறேன் ...

எழுதியவர் : முகிலன் (28-Dec-15, 5:45 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 75

மேலே