வானமும் நானும் - 12345

வயதுக்கு வந்தது
வானமும்........! அதன்

அரும்பிய மீசையாய்
அழகிய வானவில்....!!

முறுக்கி வளர்க்க
முயன்று முயன்று

முளைத்ததை மழிக்குது
முனைப்பாய் வானமும்.....!!

கருகரு மேகங்கள் மெதுவாய்
கலை நயமென வளர.....வளர....

காண்கிறேன் இப்போது அங்கே
கனகச்சிதமாய் முளைத்த கரு மீசை....!

முயன்றால் எதுவும் முடியும் என
முழங்குது வானமும் இடியாய்...!

பயின்ற ரசனையை பகிரவே நானும்
படைக்கிறேன் தமிழில் கவியாய்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (28-Dec-15, 7:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 130

மேலே