சொல் கைதிகள்
கரங்களுக்குள் சிக்குவதில்லை
காற்றில் மிதக்கிற
பூக்களின் சந்தம்
கருவிழிகளுக்குள் நிலைப்பதில்லை
கனவுகளுக்குச் சிறை விரிக்கிற
கவிதைப் பறவை
உதடுகளில் சுகிப்பதில்லை
ஓரப் பார்வை கனிகிற
சில புன்னகைப் பழங்கள்
பற்களின் சிறைச் சுவர்கள்
பத்திரப் படுத்திப் பாதுகாத்தாலும்
என் சொல் கைதிகள்
உன்னைப் பார்த்ததும்
தப்பிக் குதித்தாயினும்
உன்னைத் தொட்டு
இரவுத் தூக்கில்
செத்துப் போகவே
பிரியப்படுகிறது
அடை காக்கிறது
குயிலை
புறாக் கூடு .