மரண விபத்து

அடித்துப் போட்டுத்
தூக்கி எறிந்து
திசை கடந்து நகர்ந்து
போய் விட்டது
ஒரு சரக்கு லாரி

எப்போது நடந்திருக்கலாம்
என்பதை
ரத்தத் துளிகளின் ஈரமும்
பூமித் தாயின்
கண்ணீர் மடியும் தான் அறியும்

வாய் பிளந்து
குடல் சரிந்து
நிலை குத்திய பார்வையோடு
நடுச் சாலையில்
செத்துக் கிடக்கிறது
செவலை நாய்க் குட்டி

நாற்றம் பேசிக் கதறி அழுகிறது
காவல் நிலையம் சுற்றி
காற்று .

எழுதியவர் : அன்புபாலா (11-Jun-11, 4:47 pm)
சேர்த்தது : anbubala
Tanglish : marana vibathu
பார்வை : 300

மேலே