வாழவே பிடிக்கும்

நகர வீதிகளின் தார்ச் சாலை
அகோரப் பசியோடு
வாகனப் புகைக் கதறல்
மல்லிகை சரம் மிதக்கும்
கூந்தல் கடலில்
கருவிழி மீன்கள்
மூழ்கித் தவிக்கும்
ஒரு சில கண்களின்
கண்ணாடிக் கவசம்
இமைகளை மறைக்கும்
செவிகளிலும் சிரிக்கும்
கொஞ்ச நேரம்
கூடிச் சிரிக்க
கை பேசிகள்
இசைஒலியால் அழைக்கும்
பூக்களோடு பூசலை
மறைக்க
பார்வைப் புழுக்கள்
ஈக்களை கிறுக்கும்
இன்னும் நூறு ஜென்மம்
இருந்தாலும்
வாழவே மிகவும் பிடிக்கும்...