மூங்கில் காடு

ஔவை ஓதிய
கல்வி
வள்ளுவன் போதித்த
வாழ்க்கை நெறி
கம்பன் சிலாகித்த
கனவுகள்
ஷெல்லி சிந்தித்த
உணர்வுகள்
பைரன் பாடிய
உலகியல்
கீட்ஸ் எழுதிய
சித்தாந்தம்
ஷேக்ஸ்பியர் சிரித்த
ஹாஷ்யம்
பாரதி மூட்டிய
உக்கிரக் கொல்லி
இன்னும் மண்டிக் கிடக்கின்றன
மூங்கில் காடுகளுக்குள்
சில புல்லாங்குழல்கள் ...