வாழ்க்கை சக்கரம்

வலுத்தவர் வாயில்
இறையாகிடுவர்
இளைத்தவர்!
இளைத்தவர் எல்லாம்
வலுத்தவர்கள் முன்
சளைத்தவர்கள் தாம்!

வல்லவனுக்கு வல்லவன்
வளர்ந்து கொண்டே போகும்
வாழ்க்கை சக்கரம்
இறுதியில்
மண்ணையே நாடும்
மடிந்தே போகும்
பலங்கள்,பலவீனங்கள்!

சுழலும் உலகில்
வாழ்க்கை ஓட்டத்தில்
நேற்றைய பலம்
இன்றைய பலவீனம்
நாளைய நாட்கள் என்பது
வல்லவர்களுக்கு வலுவாகிறது!

ஏழைகள் என்றும்
வாடிவிடும் மலர்கள்தாம்
தாக்குப்பிடிக்க முடியாது
உதிர்ந்து விடும் பூக்கள்
முட்களுடன் போராடி!

வாழ்க்கைச்சக்கரத்தில்
இளைத்தவர்கள் என்றும்
உடைந்த சக்கரம் தான்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Dec-15, 7:09 pm)
Tanglish : vaazhkkai chakkaram
பார்வை : 523

மேலே