நானும் ஓர் அனாதையாய் ------

நானும் ஓர் அனாதையாய்......!!!


ஆதரவு தேடினர்
அன்பிற்கு ஏங்கினர்
பட்டமோ - அனாதைகள்.


தேடிடும் வாழ்க்கைக்
கிடைக்கவில்லை.....
திக்கெல்லாம் திரியும்
குழந்தைகள்......


நான் எழுதினால்
மட்டும் தீர்வு கிடைக்குமா?
நானும் ஓர் அனாதையாய்
நிற்கின்றேன் குழந்தையாய் மாறி....


யார் மீது குற்றம் ...?
யார் மீது பழி போடுவது..?
ஏற்க மறுக்கும் சமுதாயமா...?
ஏற்க மறுக்கும் சமூகமா..?



எங்கு நோக்கிலும்
சின்னஞ்சிறு தளிர்கள்.....
மடியத் துடிக்கும்
இவர்களின் வாழ்க்கை...
மலருமா ? மணக்குமா..????
அனைத்துமே கேள்விக் குறிகள்...!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Dec-15, 7:49 pm)
பார்வை : 116

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே