ஏதோ ஒரு யோசனை - ஆனந்தி

இதமாய் வீசிய தென்றலோடு,
இமைக்க மறந்த கணங்களில் 
ஏதேதோ,
பேசிக்கொள்வேன் எனக்குள் நானே
முரண்பட்டு.
சில சமயங்களில் அழுத்தமாய் அமைதியும்
காப்பேன்.
எதுவுமே இல்லையெனினும் 
அப்படி இருக்கலாம் 
இப்படி இருக்கலாம் 
என்ற சிந்தனையுனூடே  பிரதிவாதியாகவும்,
நானே மாறுவேன்.
ஆகாயத்தை அதிசயமாகவும் 
பார்ப்பேன்.
மறுகணமே ஏளனமாகவும்.
எனக்கு நானே அன்னியமில்லை 
சில சமயங்களில் அப்படியும்.
என் எண்ணங்களே என்னை சுற்றி 
வியாப்பித்திருக்கும்.
நான் யோசிப்பதற்கும்,
அதற்கு முந்தைய பொழுதுகளுக்கும் 
இடைப்பட்ட நிலையில் ஏதோ ஒன்று 
நிகழ்கிறது இப்புவியில் 
என்பதாய் உணர்ந்து, 
நினைவை முடிப்பேன்....

எழுதியவர் : ஆனந்தி.ரா (30-Dec-15, 7:51 pm)
பார்வை : 189

மேலே