கஜல் கஜல் இது வேறு கஜல்
நதியே நீ என்றாலும் என்
சிகரத்திலேயே உறைந்துவிடு
வழிதான் நீ என்றாலும்
பயணத்தினூடே கரைந்துவிடு
உன் நிழலாய் என்னை தொடர விடு
என் நிழலில் உன் வண்ணம் படரவிடு
உன் கனவாய் என்னை தொடர விடு
அந்தக் கனவிலோர் கனவாய்க் கலந்துவிடு (நதியே நீ ...)
விதியே சூழ்ந்து வந்தாலும் அதை
வாழ்க்கையை விட்டே துரத்திவிடு
வாழ்வே இருளாய்ச் சூழ்ந்துவரின்
காதல் மின்மினிகள் பறக்கவிடு (நதியே நீ ...)
சகியே காதல் சாகுமெனில்
காதலைஉன் காலடியில் மடியவிடு
விழியே எனது வைகறைகள்
உன்னிமைச் சரிவினில் விடியவிடு
நதியே நீ என்றாலும் என்
சிகரத்திலேயே உறைந்துவிடு...
பின் குறிப்பு
-------------------
(ஐயா அகன் அவர்கள் எமது" நதியே ...." கஜல் வரியைத் தொடர்ந்து தவழவிட்ட
"வழிதான் நீ என்றாலும்
பயணத்தினூடே கரைந்துவிடு "
என்ற கஜல் என்னை என்னென்னமோ செய்தது.. கடவளின் நிழல்கள், சுமைகள் இவற்றைவிட இந்த கஜல் வரியில் கரைகிறேன். கரைதலில் ஒரு கஜல் என்றாலும் ..இது வேறு கஜல் )