புரியாமல் நான்
என் பசிக்கு நீ இரையா
கரை தேடும் என் கண்கள்
பிறை நிலவும் கரைய
இருள் நிறைய
பிறையோடு நானும் கரைய
நான் வரைந்த கோடுகள்
சிறை பட்டது நானே
காற்றை பிடிக்க முடியுமோ
விரல் நுனியில் உணர்வு
மறைவதற்குள் மறைந்தாள்
பாவம் அவள்...
ஒரு கை அணைக்க மறு கை அடித்தால்
என் செய்வாள்...
பேதை மனம் கல்லோ
கலை எடுக்க வேண்டியது என் மனம்
பிழை தேடும் விழி கொண்டேனே
கானல் நீரும் வற்றாது
வற்றுமோ உண்மை காதல்
சிறை பிடித்த கைகள் கலை எடுக்க வருமோ
கலை இழந்த கண்ணே சிலை கண்டதேனோ
ஒரு முறை இரு முறை தகுமோ
தாகம் தீர வழி என்னவோ
உளி தாங்கும் வலி கண்டதேனோ
தெளிவு வேண்டி நின்றேனே
ஒளி ஏற்று கரமே மனம் தெளிய
பாடம் புரியவில்லை எட்டாத கணக்கு
கிறுக்கல் இது புரியாத கவிதை
புரியாமல் நான் தெரியாமல் நின்றேன்!