கிணறு தோண்டுகிறது மனது

கிணறு தோண்டும்
மனது , அவ்வப்போது
தவறியும் விழுந்து விடுகிறது..

அனிச்சை செயலாய்
கொப்பளித்த அசுரத்தை சில நேரம்
பறவையாக்குகிறது......

குத்திக் கிழிக்கும்
முட்களைத் தின்று விட்டு
ரத்தம் கக்கி ஓவியம் செய்கிறது...

மலையேறி உருண்டு வருவதை
வாடிக்கையாக்கிய மனது
முட்டி மோதி, மூளை சிதறுவதை
விரும்புகிறது...

ஆகச் சிறந்த ஆக்கங்களின்
ஊடாக ஒரு கூடை
புழுக்களை கொன்று தின்கிறது...

இருள் சூழ இலையாகி
நிறமாற்றம் யுகம் ஆகி -அது
சிகை கொய்யும் திகிலாகிறது...

வழிக்குள் பிழையாகி
மனதுக்குள் அடங்க முடியாமல் -அது
மீண்டும் மீண்டு
கிணறு தோண்டுகிறது...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (31-Dec-15, 10:29 am)
பார்வை : 150

மேலே