மா புரட்சி செய்திடுவோம்

மாசு நிறைந்த
பூமியை .........
தூசு தட்டி
துடைத்திடவே
மனித இனம் திரண்டு
மா புரட்சி செய்திடுவோம்

சுவாசிக்கும் ..காற்றினை
சுத்தப்படுத்திடவே
சுற்றுப்புர சூழலை
சுத்தமா வைத்திடுவோம்

ஓசோன் படலத்தில்
ஓட்டை விழுந்த்ததினால்
சீசன் தவரிஇங்கே
பருவங்கள் மாறுதடா ?

சுற்றுகின்ற பூமி
சுற்றாமல் நின்றிருந்தால்
இரவு பகல் இங்கே
இல்லாமல் போயிருக்கும்

உன் வேதியல் ......
மாற்றத்தினால்
வேதனைதான்
மிச்சமிங்கே .......
ஆறுகளைஎல்லாம்
அசுத்தப்படுத்திவிட்டு
தூறு வராமல் ....
துந்துபோய் விட்டதடா?

உணவு தானியத்தில்
உற்பத்தி பெருக்கிடவே !
மண் வளத்தில் .....நீ
ரசாயன மாற்றத்தை
தந்து விட்டாய் ?
உன்னோடு ...வரலாறு
உலகுக்கு தேவையில்லை
மண்ணோடு வரலாறை
மனதுக்குள் மறையவில்லை

மக்காத குப்பையை
மண்ணிலே போட்டுவிட்டு
மக்குபோல வாழ்ந்திடும்
மடமையை நீக்கிவிடு ?
மரங்களை வெட்டி
மழைதனை .........
தடுத்துவிட்டாய்
உரங்களை கொட்டி
மண் வளத்தினை
மாற்றிவிட்டாய் ?
( தொடரும் )

எழுதியவர் : இரா .மாயா (31-Dec-15, 7:12 pm)
பார்வை : 54

மேலே