புத்தாண்டே வருக

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!


கண்ணீர் மழைபொழிந்து
கடல்நீர் உப்பைக் கூட்டிய
கடந்த ஆண்டைக்
கடந்துவிட்டோம்..

பெருமழை வெள்ளத்தில்
புதையலாய் மிதந்துவந்த
மனிதநேயத்தைப்
பார்த்துவிட்டோம்..

வெள்ளம் வடியும்வரை காத்திருந்து
வெளியே தலைகாட்டும்
அரசியல் அநாகரீகங்களை
அறிந்துகொண்டோம்..

வேண்டாதவற்றை வெள்ளத்தில் போகவிட்டு,
அழிக்கும் மழையாய் இல்லாமல்
அன்புமழையாய் வா புத்தாண்டே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jan-16, 7:39 am)
Tanglish : puthaande varuka
பார்வை : 142

மேலே