தேன் சிந்துதே வாழ்த்து

தங்கும் நிறையமைதி தாரணியில் தோன்றிட
பொங்கும் புதுவெள்ளம் போலுள்ள – மெங்கும்
மகிழ்ச்சியில் பூரிக்க மண்மேல் மலர்ந்து
நெகிழ்ந்திட செய்யணும்புத் தாண்டு

இயற்கை அனர்த்தங்கள் இல்லா உலகாய்
மயக்கும் புதுமைகள் செய்து - வியப்பில்
இடவேண்டும் புத்தாண்டு எங்கெங்கும் இன்பம்
படர்ந்திட வைத்திடல் நன்று.

உள்ளதை சொல்லியே நல்லதை செய்கின்ற
உள்ளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டு – பள்ளத்தில்
உள்ளநம் பந்தங்கள் சொந்தங்கள் கைதூக்கிக்
கொள்வதை செய்யணும்புத் தாண்டு.

ஆண்டுகள் மாறினும் மாறாத துன்பத்தை
ஆண்டவன் வந்துமே பார்க்காமல் – ஆண்டாண்டு
காலமாய் கொண்டவர் கண்களில் ஆனந்தக்
கோலம் விதைக்கணும்புத் தாண்டு.

புத்தாண்டு வாசலில் பூக்கோலம் போட்டென்னில்
தித்திக்கத் தேனள்ளி வார்க்கின்ற - முத்தான
அன்பர்கள் நண்பர்கள் அத்தனை பேருக்கும்
என்னுள்ளம் சொல்லுதே வாழ்த்து.

*மெய்யன் நடராஜ்
****தோழமைகள் அனைவருக்கும் மகிழ்வான புத்தாண்டு வாழ்த்துகள்.*****

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Jan-16, 2:43 am)
பார்வை : 94

மேலே