அற வாழ்வு

நம் சொல்லின் செயலின்
வெற்றியும் பெருமையும்
உந்துதல் என்றால்
உண்மையில் கர்வமும் காழ்ப்புமே
கடைசி வரை காதல் செய்யும்!
ஆணவமும் அராஜகமுமே
ஆட்சி செய்யும்!

எதார்த்தத்தில் வெற்றி என்பதே
வெறியும் வன்மமுமே!
ஆண்டவரும் ஆள்பவரும்
ஆழப் பதித்த ஆசை விருட்சம்
ஆறாத புண்ணின் அசிங்க ரணம்

அன்பினை மருந்தாய்
அரிதாய் கொள்வதால்
ஆசை மனங்கள்
ஆறாத ரணமாய்
அல்லல் படுகிறது!

போட்டியே வாழ்க்கையாய்
பாடம் படித்து
பொழுதைக் கழித்து
பொறுமை இழக்கும்
பரிதாபம் ஏன்!
பாசம் நேசம் பணமாய் போனதால்
பரிகாச வாழ்க்கை இது!

நிஜமாய் வாழ நிம்மதியாய் வாழ
நிர்பந்தங்கள் நிலை மாற்றும்!

ஆனந்தம் எளிமையில் கண்டால்
எதிலும் அன்பைக் கொண்டால்
அகத்தில் அமைதி பெற்றால்
அனைத்தும் சாத்தியமே
அற வாழ்வு சத்தியமே!

எழுதியவர் : கானல் நீர் (2-Jan-16, 5:34 pm)
Tanglish : arr vaazvu
பார்வை : 169

மேலே