எண்ணத்தில் துளிர்த்தவை -​ 3

உ​​யிரி​ல்​லா ​உருவத்தை வைத்து
உயிருள்ள ​மனிதர்கள் ​
இழுப்பது ​பக்தர்களின் ​இதயத்
தேரோட்டம் ....!

பசிக்கு பிரியாணி பொட்டலம்
கைகழுவ சாராயம்
தேர்தல் நேரத்தில் நடக்கும்
தேரோட்டம்​ ... !

​-----------------------------------​

​​அள்ளி வீசிடும் வாக்குறுதிகள்
மனதை மயக்கினாலும்
மறந்திடும்​ மக்களால் கட்சிக்கு
தேரோட்டம் .... !

வீதி​களில் நடந்திடா தலைவர்
வீதிஉலா வருவது
காணும் தொண்டர் ​மனதில் ​
தேரோட்டம் ...!

​--------------------------------------​
​தமிழே அறியாத நடிகைகள்
தமிழ் திரை​வானில் ​
​புகழுடன் பறப்பது ​திரையுலக
தேரோட்டம் ...!

​லஞ்ச​ம் தந்திட ​ ​முந்திடும் ​
நெஞ்சங்கள் உள்ளவரை
வாங்கிடும் எவருக்கும் என்றும்
தேரோட்டம் ...!
​-------------------------------

பழனி குமார்
03.01.2016

எழுதியவர் : பழனி குமார் (3-Jan-16, 12:44 pm)
பார்வை : 252

மேலே