பயணம்
மேடு பள்ளம் பாதையில்
மனம் மட்டும்
ஆகாயத்தில்
வட்டமிட்டுக்
கொண்டிருக்க
உயிரை பார்க்க
வந்த உடல்
புவிஈர்ப்பு விசையை
நாடிதனில் நொடியில்
கண்டு பிரமிப்பில்
வாய் பேசவிடாமல்
நின்றதேனடி?
இத்தனை வருட
பிரிவை தாங்க
முடியாமல் தான்
இரு உடல்களான
ஒரு உயிர்கள்
ஆரத்தழுவிக்
கொள்கின்றனவோ?
நினைவுகளோடு
உலா வரும்
நிழல்கள்
கைகளை கோர்த்து
நிஜங்களை
தேடுகின்றனவோ?
வேண்டாம் என்று
மனம் பதைத்தாலும்
வாழ்க்கை நகர்தலுக்காக
நகரும் மெய்யை
மெய்யாக வேண்டா வெருப்பாக
வழியனுப்பும் உன்னோடே
உயிரை விட்டு
சென்றேனோ?
பயணம் நீண்டு
கொண்டிருந்தாலும்
நீ இல்லாமல்
நிறைவடையுமா?
மீண்டு வருவேன்
மீண்டும் மீண்டும் வருவேன்
மயானம் வரை உன்னோடு
உன் கை கோர்த்தபடி...
மீண்டு வந்தால்
மீண்டும் மீளாதபடி
முந்தானையில் முடிந்துக் கொள்வாயா!
இல்லை நெஞ்சத்தில் போட்டு பூட்டிக்கொள்வாயா!