மயக்கம்

தேனை அதிகம் உண்டததால்
வண்டுக்கு மயக்கம்
வயிறு புடைக்க உண்டததால்
புசித்தவனுக்கு மயக்கம்
பசி மிகவும் அதிகரித்ததால்
பசித்தவனுக்கு மயக்கம்
காதல் மிகவும் அதிகரித்ததால்
காதலருக்கு மயக்கம்
ஆசை எதிர்பார்ப்பு மிகுந்ததால்
பொருள்மீது மயக்கம்

மயக்கங்கள் மயக்கங்கள்
அளவுகள் அதிகரித்தால்
வரும் மயக்கங்கள்
அளவை நினைத்தால்
வரும் தயக்கங்கள்
அளவறிந்து கொள்ளுங்கள்
உங்கள் விருப்பங்கள்


- செல்வா

எழுதியவர் : செல்வா (4-Jan-16, 8:15 pm)
Tanglish : mayakkam
பார்வை : 92

மேலே