இலக்கிய உலகமோ

இலக்கிய உலகமோ !

கவிதைகளில்
காவியம்
படைப்பவன்
கவிஞன்

காவியத்தில்
குறைகளைக்
காண்பவன்
புலவன்

கவிதையில்
உயிரை
ஊட்டுபவன்
கவிஞன்!

உயிரூட்டிய
கவிதையில்
எதுகையும்
மோனையும்
பார்ப்பவன்
புலவன்

அழகுநயம்
சேர்ப்பவன்
கவிஞன்!

அணிநயம்
பார்ப்பவன்
புலவன்

முரண்பாடுகள்
மொத்தமே
கவிஞன்!

முரண்பாடுகளுடனும்
முரண்படுபவன்
புலவன்!

கவிஞனும்….
புலவனும்..
நேரெதிர்
துருவங்களாகவே
இருப்பதுதான்
இலக்கிய உலகமோ !

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (5-Jan-16, 9:56 pm)
Tanglish : ilakkiya ULAGAMO
பார்வை : 57

மேலே