கர்னல் நிரஞ்சன் மகள் செய்த பாவம்

என்ன பாவம் செய்ததோ... இந்த பிஞ்சு விரல்கள்.....
தன் தந்தையின் கையை பிடித்து இனிமேல் நடக்க முடியாமல் போனதற்கு....

என்ன பாவம் செய்ததோ... இந்த பால் முகம்....
தன் தந்தையின் முகத்தை இனிமேல் பார்க்க முடியாமல் போனதற்கு...

என்ன பாவம் செய்ததோ.. இந்த தேவதையின் வயது...
தன் தந்தையின் பாசத்தை இனிமேல் அனுபவிக்க
முடியாமல் போனதற்கு.....


என்ன பாவம் செய்ததோ... இந்த கால்கள்..
தன் தந்தையின் நெஞ்சில் இனிமேல் மிதிக்க முடியாமல் போனதற்கு...

என்ன பாவம் செய்ததோ... இந்த தேவதையின் பெயர்...
தன் தந்தையின் அன்பால் அழைக்க முடியாமல் போனதற்கு...

என்ன பாவம் செய்ததோ.... இந்த கண்கள்
தன் தந்தை முகத்தை இனிமேல் பார்க்க முடியாமல் போனதற்கு....

கடவுளே!!! என்னதான் பாவம் செய்தது.... இந்த பிஞ்சு முகம்...
தன் தந்தை இறந்ததை கூட அறியாத
அந்த பால் முகம்....

அந்த வெண்ரோஜா கண்களை பாருங்கள்...
அந்த கண்கள் கேட்கும்.. ஆயிரம் கேள்விகளுக்கு... பதில் இருந்தால் கூறுங்கள்....

எனென்றால்
நீயும் இந்தியனே!!!!

கர்னல் நிரஞ்சன் ஆத்மா சாந்தி அடைய
கடவுளிடம் வேண்டுகிறேன்......

அன்புடன்... சிவா...

எழுதியவர் : சிவா (5-Jan-16, 11:13 pm)
பார்வை : 75

மேலே