காதல்

தோழியாய்
நீயும்
இருக்கையிலே...
சொர்க்கம் என்பது
எனக்கெதற்கு...

மழலையை போலே
மாறிடுவேன்
மடியினில்
நீயும் தாங்கிடுவாய்...

நீ இல்லா
பேருந்து இருக்கை
உன் பெயரை சுமந்து கொள்கின்றன...

தாகத்தை தீர்க்கும்
தண்ணீரில்
உன் பிம்பம்...
தாகத்தை தீர்த்தது
தண்ணீரா...!
நீரா...!
👌===============================
மாணவன் கேட்பது அரசின் விடுமுறை...
மணவாட்டி மறுப்பது அரசின் விடுமுறை....

++++++++++++++++++++++++++++++++

வானத்தை வனமாக்கி
வனவாசம் செல்லும்
மணாளரே
உன் சீதை
இங்கிருக்க
எங்கே
போகிறாய்...
என்னை தனியே
தவிக்க விட...
$$$$$$$$$$$$$$$$$$$$

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jan-16, 10:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 133

மேலே