காதல்

காதல்
""""'''''''
எல்லாவற்றையும்
மனசுக்குள் பொத்தி
மறைச்சு!
முகத்தில் சிரிப்பை
செயற்கையாக
உதிரவிட்டவள்"
தாக்குபிடிக்க முடியவில்லை
என்னைபார்க்கும் வரை!

கண்கள் கலங்க!
கசப்பான கடந்துபோன
காலங்களின் காயங்களையும்
ஒத்துவராத ,ஒத்துபோகாத
நடைமுறைகளை
கண்ணீருடன் ஒப்பிவித்தவள்!
நீண்ட பெருமூச்சுக்கப்பால்""

-இறுதி சந்திப்பொன்றில்
அடைமழையின் சாட்சியை
முன் நிறுத்தி
நான் எதிர்பார்தேன்"""
நீங்கள் காதலை சொல்வீர்கள்"" """என்று

அவளது கேள்வியில்
நம்பிக்கை ஒன்று
துடைத்தெறியபட்டு!
மௌனமாக கலைந்துபோன
இயலாமை பறவை ஒன்று
விதியை சபித்தபடி பாதி
வாழ்வை கடந்து
சென்றுகொண்டுருந்தது!


நான் எப்படி சொல்வேன்""
உன்னை எப்படி எல்லாம்
நேசித்தேன் என்று!

இப்பவும் உன் நினைவுகளுடன்
வாழ்கிறேன்"" என சொல்ல
நினைத்த என்னை குறுக்கிட்டு!

எல்லாம் விதி"" என்று
சொல்லி என் கையை
வரிடிவிட்டு
பதிலுக்கு காத்திராது
கண்ணீருடன் கலைந்து
போகிறாள்!
நான் தினமும்
நினைவுகளால்
பூசிக்கும்
மூக்குத்தி இல்லா
அம்பாள்!

லவன்

எழுதியவர் : லவன் (6-Jan-16, 12:41 am)
Tanglish : kaadhal
பார்வை : 163

மேலே