நண்பர்கள்
காரணம் வேண்டாம் நாங்கள் பேச...!
எங்கே ஆரம்பித்தோம்...
எங்கே முடித்தோம்...
எங்களுக்கே தெரியாது!
ஆரம்பித்த இடத்திற்கும்
முடித்த இடத்திற்கும்
சம்மந்தம் இருக்காது .
ஆனால் எங்களுக்குள்ளே சம்மந்தம் உண்டு...
நண்பர்கள் என்று...
~பிரபாவதி
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
சண்டை கூட இங்கே
சந்தோஷம் தான்...
சந்தோஷமே இங்கு (எங்கள்) இரகளை தான்...
எனை வெருப்பேத்துவதும் அவள் தான்...
எனை விட்டுக்கொடுக்காதவளும்
அவள் தான்...
எனை தட்டிக் கொடுப்பவளும் அவள் தான்...
எனை கொட்டி வளர்ப்பவளும் அவள் தான்...
எனை கட்டிப் பிடிப்பவளும் அவள் தான்..
அவள் தான் என் .....தோழி......
கையேந்தி பவனோ...!
வசந்த பவனோ...!
நாங்கள் இருக்கும் இடமே
எங்களுக்கு சொர்க்கம்....
பிரிவு எங்களை
பார்த்து பரிகாசம் செய்கிறது...
நாங்கள் வெளி வேஷம் போட்டுக் கொள்கிறோம் அதனிடம்...
(பாசத்தை மறைத்து)
சாந்தம் சந்தமானது ...
அவள் மௌனத்தின் மொழியில்...
வெயில் என்றால் நிழல் ஆகிறாள்...
மழை என்றால் விறகாகிறாள்.....
யார் என்று கேட்கிறீர்களா?
அவள் தான் என் ... மனம்...