காலை வணக்கம்

பூலோகமே வாழ்த்துமே
புது நாளிது போற்றுமே
காலையிலே வரும் காற்றில்
கதிர் அலைகள் தரும் பாட்டில்
இன்னாளில் பேரின்பம்
எல்லாமே சுகமென்போம்

பூலோகமே வாழ்த்துமே
புது நாளிது போற்றுமே
ஓராயிரம் பூக்கள்
ஊரிவைக்கும் தேனும்
சுறுசுறுப்பாய் காரியங்கள்
சூடிவைத்த நறும் பணிகள்
ஓடிவரும் தேனீ போல்
உறிஞ்சிகொள்வோம் உற்சாகத்தில்

பூலோகமே வாழ்த்துமே
புது நாளிது போற்றுமே

அருவிபக்கம் தாகமில்லை
ஆசையின்றி மனிதரில்லை
வரும் நாளில் கனவும் வெல்லும்
வாழ்த்திதானே இந்நாள் சொல்லும்
படுக்கையை விட்டு எழுந்திடுவோம்
பகல் பொழுதில் இப்போ வென்றிடுவோம்

பூலோகமே வாழ்த்துமே
புது நாளிது போற்றுமே



எழுதியவர் : . ' .கவி (12-Jun-11, 1:51 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 1057

மேலே