பேசும் ஓவியம் எம்.எப். ஹூசைன்
ஓவியத்தின் கலை மகனாய்
உலர்ந்துதான் போனேனே
உன் நிலையில் நானிருந்து
ஒரு போது தளர்ந்தேனே
இயற்கையினை தூரிகையாய்
எண்ணம்போலே வரைந்தாலும்
வண்ணங்களை குழப்பத்தினால்
வடிக்கவில்லை ஆடையென்று
பட்ட பாடு நானறிவேன்
பாரதம் விட்டு நீ சென்றதனால்
துரத்தியவரையும் மதிக்கிறேன்
தூரிகை உன் கையையும் பிடிக்கிறேன்
மகாத்மா காந்தி மனநிலையை
மண்ணில் உள்ள நாளெல்லாம்
எல்லாம் தொழுது எனக்குள்ளே
இன்றும் இருக்கிறது இவ்வுலகம்
பொல்லாதொரையும் புண்படுத்தாமல்
புத்தனின் ஓவியம் வரைவதற்கு
உள்ளுக்குள் மெய் சொல்லால்
ஓவியத்திற்கும் பொய்யின்றி
மையெல்லாம் மனதில் தொட்டு
மனிதத்திற்கு நீ சொல்லிதர
நான் வரையும் ஓவியத்தில்
நன்றாக நீ சிரித்துவிட
கோடுகளெல்லாம் ஓவியமில்லை
குறைகளில்லாமல் வாழ்வுமில்லை
சாயம் பூசி உதட்டில் வரையும்
சத்தமில்லாமல் மௌனத்தில்
ஞானம் கொண்டு நான் வரைந்தால்
நல்ல ஓவியம் அதுதானாம்