மகரந்தத் துகள்
மெல்லிய காற்று கூட
எளிதாய் தூக்கி சென்றிடும்
என்னை ..
ஒரு மகரந்தத் துகள் நான்
என்பதால்..
..
தாயின் மடி விலகி
ஒரு பூவில் இருந்து உதிர்ந்து
நான் போகும் வழி புதிது ..
இடையில்..
காற்றின் திசை வழி போனாலும்..
பாறைகளில் படிவதுண்டு
மோதுவது வழக்கமுமில்லை..
முடிவதும் இல்லை..
பச்சை மரங்களில்
தஞ்சம்..
கொஞ்சம்..
பயணத்தின் ஊடே..
மறுபடியும் ..
என்னால் என்றில்லாமல் ..
காற்றின் போக்கில்
மிதப்பதே எனக்கு
இங்கு வாழ்க்கை..
பாக்கியம் இருந்தால்
பூஜைக்கான மலரோடு
வாசம் செய்து..
என் தெய்வத்தை
அலங்கரிப்பேன்..
அல்லது ..அவன்
சந்நிதியில் எரியும்
ஒரு ஜோதியில் கலப்பேன்..
..
இவையெதுவும்..
இல்லையென்றால்..
இறுதியில் ..
வெறும் மண்ணில்
வெறுமனே புதைவேன்..
ஒரு மகரந்தத் துகள் தான் நான்
என்பதால்..
..
மற்றபடி
இந்தத் துகள்
சொல்லிக் கொள்கிற மாதிரி ..
வேறு ஏதுமில்லை..!