இனியவன் ஹைக்கூ

சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
நிலத்துக்கு முத்தம்

******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள்
இசை

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
அறிவு

********************
இருட்டு குடிசை
விரட்டும்பேய்
ஒளி

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவு

*******************

வீணாய்ப்போகிறது மழை.
குறுக்கும் நெடுக்குமாய்
வெள்ளம்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Jan-16, 8:13 pm)
Tanglish : iniyavan haikkoo
பார்வை : 154

மேலே