இனியவன் ஹைக்கூ 02

தாடி வளர்த்த தாத்தா
பிடித்திழுக்கும் பேரன்.
ஆலம் விழுது

-----

தன்னை அழித்தாலும்
இறுதிவரை மூச்சுதரும்
மரம்

-----

நவரசத்தை காட்டும்
சலனமுள்ள சடப்பொருள்
தொலைக்காட்சிபெட்டி

----

கருவில் கலையாமல்
தெருவில் கலையும்
குழந்தை தொழில்

------

தான் நடனமாடி
பிறரை வாழவைக்கும்
பேனா

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Jan-16, 8:20 pm)
பார்வை : 165

மேலே