ஏணிந்த முரண்பாடு

அனைத்துமத ஆலயங்களிலும்...
அன்பைப்பற்றிய போதனைகள்
ஆலயங்களின் வாயில்களில்...
'அநாதைகளாய் சிலர்'
ஏணிந்த முரண்பாடு ?
கடவுளின் போதனைகள் கேட்கவில்லையா?
கருணை எதுவென புரியவில்லையா?

மனிதரை மனிதராய்...
பார்க்காத மனிதனின்
பேராசை வேண்டுகோள்
'கடவுளே கண்திற'
ஏணிந்த முரண்பாடு?
சுயநலமே உலகென்று ஆகிவிட்டதா?
சூழ்ச்சிகளே மனிதமென்று மாறிவிட்டதா?

ஆறுகுளங்களை மண்ணில் புதைத்து...
அதன்மேலே அடுக்கி 'கல்'அறைகள் கட்டி...
அருகே! அமர்ந்து ஒப்பாரிகுறல்..
'தண்ணீர்வேண்டும்'...
'தண்ணீர்வேண்டும்'...
ஏணிந்த முரண்பாடு?
இயற்கை எதுவென்ற குழப்பமா?
இயற்கையை வென்றவாழ்வின் துவக்கமா?
$-மூர்த்தி

எழுதியவர் : (6-Jan-16, 8:54 pm)
பார்வை : 82

மேலே