மகளுக்குப் பெயர் மந்திரி

மகளுக்குப் பெயர் மந்திரி
=======================
இந்திப் பெயர் மோகம்
தமிழர்களின் தீராத தாகம்
திரை மோகம் அளிக்கின்ற
இரசனை விளையாடல் இது.
=======
அடுத்த வீட்டுப் பெண் குழந்தைக்கு
சுந்தரி என்று பெயராம்
சுந்தரி என்றால் அழகியென்று
அர்த்தம் ஆகிறதாம்.
=====
நம்ம வீட்டுக் குழந்தைக்கு
மந்திரி என்ற பெயர் வைத்து
மனங்குளிரக் கொஞ்சலாமே
நீயென்ன சொல்கிறாய்?
======
அடியே இல்லத்தரசியே
மந்திரி என்ற சொல்லுக்கு
அமைச்சர் என்ற பொருள் தவிர
மந்திரித்தல் என்ற வினையாகிப் போகுமே.
=======
பெயரின் பொருள் தானா முக்கியம்
புதுமையான பெயரன்றோ நாகரிகமாகும்
இப்பெயரைத் தம் பிள்ளைக்கு
எவருமே சூட்டியிருக்க மாட்டார்.
=====
அமைச்சர் ஆவதற்கு
வயதொன்றே தகுதி.
நாம் பெற்ற செல்வியை
மாண்புமிக்கவளாய் வளர்க்கலாமே!
======
மந்திரி என்ற பெயர்
புதுமைக்குப் புதுமை
தமிழர்களில் பெரும்பாலோர் விரும்பும்
இந்திப் பெயராகவும் இருக்கும்.
========

எழுதியவர் : மலர் (6-Jan-16, 9:19 pm)
பார்வை : 67

மேலே